ServiceLanka — வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான நம்பகமான சேவை
🌐 Language:
📍 Toronto, Ontario, Canada
Canada கனடா ஒருங்கிணைப்பு Sri Lanka இலங்கையில் நேரடி ஆதரவு
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான நம்பகமான சேவை

வெளிநாடுகளில் இருந்தபடியே இலங்கையில் உங்கள் சகல பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டுவாருங்கள் |

புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு, இலங்கையில் எங்கள் அலுவலகங்கள் ஊடாக — கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பிரதேசங்களில், உங்கள் அன்றாட பிரச்சனைகளை அதீத கவனத்துடனும், சீராகவும், கால தாமதமின்றி, உங்கள் சார்பாக நாங்களே முன்னின்று நிறைவேற்றித் தருகிறோம்.

கனடாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்
நம்பகமான உள்ளூர் நிபுணர்கள்
பயணம் தேவையில்லை
ரகசியமாகவும் பாதுகாப்பாகவும்
முழுமையான ஒருங்கிணைப்பு
நாங்கள் நம்பும் கூட்டாளர்கள் & தொழில்முறை வலையமைப்புகள்
Iraasadhani Inc. Iraasadhani Pvt Ltd Nanban

எங்கள் பிரதான சேவைகள்

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு எங்கள் நம்பகமான, முழுமையான சேவைகள்.

🛂

குடியேற்ற சேவைகள்

விசா, நிரந்தர குடியுரிமை (PR), குடும்ப ஒன்றிணைவு, அகதிகள் கோரிக்கை, நிரந்தர வதிவிட உரிமை போன்ற செயல்முறைகளில் உங்களை தெளிவாக வழிநடத்துகின்றோம்.

வருகை விசாPRகுடும்ப அனுசரணைவேலை அனுமதி
மேலும் அறிய
🏛️

தூதரகம் & அரசாங்க சேவைகள்

கடவுச்சீட்டு இலங்கை, இரட்டை குடியுரிமை, பிறப்பு இறப்பு திருமண சான்றிதழ்கள், போலீஸ் அறிக்கை, அதிகாரப் பத்திரம் (Power of Attorney) — அனைத்தும் சரியான வழிமுறைகள் மூலம் வழிநடத்துகின்றோம்.

பாஸ்போர்ட்இரட்டை குடியுரிமைPOAசான்றிதழ்கள்
மேலும் அறிய
🏠

சொத்துக்கள் விற்பனைக்கு மற்றும் வாங்குவதற்கு

இலங்கையில் உள்ள உங்கள் சொத்துக்கள், ஆதனங்களை விற்க வாங்க நிர்வகிக்க — நம்பகமான முகவர்கள் மற்றும் சட்ட ஒருங்கிணைப்புடன் கூடிய சேவைகளை வழங்குகின்றோம்.

வாங்குதல் & விற்றல்நிர்வாகம்சட்ட சரிபார்ப்பு
மேலும் அறிய
📜

மரண சாசனம் & அதிகாரப் பத்திரம் (Power of Attorney)

மரண சாசனம் (Will) அதிகாரப் பத்திரம் (Power of Attorney) மூலம் உங்கள் சொத்து விற்க வாங்க பராமரித்தல் — அனைத்தும் கவனத்துடனும், சரியான சட்ட முறைப்படி நிறைவேற்றுதல்.

Will எழுதுதல்திட்டமிடல்சொத்து மாற்றம்
மேலும் அறிய
💼

வணிக & நிறுவன பதிவு

இலங்கையில் உங்கள் வணிகத்தை வெளிநாட்டில் இருந்தே ஆரம்பியுங்கள் — நிறுவன பதிவு, வங்கி, வரி, அனைத்து சட்ட இணக்கங்களும் எங்களால் கவனிக்கப்படும்.

பதிவுவங்கிவரிஇணக்கம்
மேலும் அறிய
✈️

சர்வதேச விசா சேவைகள்

UK,Canada, Schengen, USA, இந்தியா, மலேசியா மற்றும் பல — சரியான ஆவணங்களுடன் உலகம் முழுவதும் பயணிக்க விசா உட்பட பயன ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல்.

UK & SchengenUSAஇந்தியாஆசியா
மேலும் அறிய

திருப்திகரமான சேவையை முழுமைப்படுத்தும் இலகுவான மூன்று படிமுறைகள்

உங்கள் முதல் தொடர்பிலிருந்து இறுதி நிறைவு வரை — அனைத்தையும் நாங்கள் கையாளுகிறோம்.

01

ஆலோசனையை பெறுதல்

கனடா அலுவலகத்துடன் அழைப்பு அல்லது Google Meet மூலம் தொடர்பை ஏற்படுத்தி உங்கள் தேவைகளை உங்கள் மொழியில் அறியத் தருவதுடன் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல் — அதன் தொடர்ச்சியாக…

02

உங்கள் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கின்றோம்

உங்கள் கோரிக்கை இலங்கையில் உள்ள எமது அலுவலகத்தினர் மூலம் நம்பிக்கையான முறையில் கையாளப்படும். எங்கள் கனடிய அலுவலகம் ஒவ்வொரு நிலையையும் நேரடியாக கண்காணித்து வழிநடத்துவதுடன் ஆலோசனைகளையும் வழங்கும் — ஒவ்வொரு கட்டமும் உங்களுக்கு உடனுக்குடன் அறியத் தருவோம்.

03

முற்றுப்பெறுதலும் அதன் பின்பான சேவைகளும்

உங்களது அனைத்து தேவைகள் பொறுப்பாக நிறைவேற்றப்படுவதை நாம் உறுதி செய்கின்றோம் — அத்துடன் அதன் பின்னரும் நாம் உங்களுடன் இருப்போம்.

கனடாவையும் இலங்கையை இணைக்கும் நம்பிக்கையின் பாலம்

நீங்கள் கனடாவில்… சேவை இலங்கை இலங்கையில். இரு நாடுகளில் செயல்படும் எங்கள் ஒருங்கிணைந்த குழு, உங்கள் தேவைகளை தடையின்றி, முழுப் பொறுப்புடன் நிறைவேற்றுகிறது.

Canada

கனடா அலுவலகம்

வாடிக்கையாளர் சேவை, ஆலோசனை & ஒருங்கிணைப்பு
  • உங்களுக்கான பிரதான தொடர்பு மையம் — எப்போதும் அணுகக்கூடியது
  • ஆரம்ப ஆலோசனை மற்றும் தேவைகளின் மதிப்பீடு & திட்டமிடல்
  • ஒவ்வொரு விடயத்தின் முன்னேற்றத்தையும் தொடர்ந்து கண்காணித்தல்
  • ஆரம்பம் முதல் நிறைவு வரை பொறுப்பான வழிகாட்டலும் ஆதரவும்
⭐ கனடாவில் எங்களுடன் பதிவு செய்யப்பட்ட இணை நிறுவனங்கள்
Sri Lanka

இலங்கை அலுவலகம்

நேரடி சேவை & செயற்பாட்டு ஒருங்கிணைப்பு
  • இலங்கையில் தேவையான பணிகளை தொழில்முறையாக நிறைவேற்றுதல்
  • அரசாங்க மற்றும் சட்ட ஆவணங்களைத் தயாரித்தல், சமர்ப்பித்தல்
  • நேரில் மேற்கொள்ள வேண்டிய பணிகளைப் பொறுப்புடன் கவனித்தல்
  • ஆவணங்கள் மற்றும் தகவல்களைத் துல்லியமாகச் சரிபார்ப்பு & பணி நிறைவு கண்காணிப்பு
⭐ இலங்கையில் எங்களுடன் பதிவு செய்யப்பட்ட இணை நிறுவனங்கள்

கனடா முழுவதும் வாழும் தமிழ் குடும்பங்களின் நம்பிக்கை

உதவி தேடி வந்தவர்கள் — சேவைகளை பெற்றவர்கள்.

★★★★★

«யாழ்ப்பாணத்தில் உள்ள எங்கள் குடும்ப சொத்தினை பதிவு செய்ய வேண்டியிருந்தது. கடந்த 30 வருடங்களாக கனடாவில் வாழும் எங்களுக்கு, ஊரில் நம்பகமான ஒருவர் கூட இல்லாத நிலையில் ServiceLanka எல்லாவற்றையும் மிகுந்த கவனத்துடன் முடித்துத் தந்தது.»

சக
செல்வராஜா குமார்
Scarborough, Ontario
★★★★★

«என் தந்தையின் இரட்டை குடியுரிமைக்கான ஆவணங்களை மட்டக்களப்பில் சரிசெய்ய வேண்டியிருந்தது. அரசாங்க அலுவலகங்களுடன் தொடர்பு கொள்வது மிகவும் சவாலாக இருந்தது. ServiceLanka தமிழிலேயே பேசி, ஒவ்வொரு கட்டமாக தெளிவாக விளக்கி செய்து தந்தனர்.»

தபா
தர்சினி பாலசிங்கம்
Mississauga, Ontario
★★★★★

«வவுனியாவில் உள்ள எங்கள் நிலம் தொடர்பான பிரச்சினை பல வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்தது. ServiceLanka வழக்கறிஞரை ஏற்பாடு செய்து, நேரில் சென்று, ஒரே மாதத்தில் தீர்வு கண்டுபிடித்தனர் — நான் இலங்கை செல்லாமலேயே.»

அஜெ
அருண் ஜெயரட்ணம்
Brampton, Ontario

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

முதலில் ஒரு இலவச ஆலோசனை அழைப்பில் தொடங்குங்கள். உங்கள் தேவைகளை புரிந்துகொண்டு, கனடா குழு இலங்கையில் உள்ள நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துகிறது — ஒவ்வொரு கட்டமும் தெளிவாக உங்களுக்கு அறியத் தருகிறோம்.
பெரும்பாலான சேவைகளுக்கு நீங்கள் இலங்கை செல்ல வேண்டியதில்லை. எங்கள் இலங்கை குழு உங்கள் சார்பாக அனைத்தையும் நேரில் கையாளும். ஏதேனும் சேவைக்கு உங்கள் நேரடி வருகை அவசியமாகும்போது, முன்கூட்டியே தெரிவிப்போம்.
சரிபார்க்கப்பட்ட வழக்கறிஞர்கள், அரசாங்க தொடர்பாளர்கள், நிலத்தடி பிரதிநிதிகள் — யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் அனுபவம் கொண்டவர்கள். உங்கள் கனடா ஒருங்கிணைப்பாளர் முழு பொறுப்பேற்று மேற்பார்வையிடுவார்.
சேவையின் தன்மை மற்றும் அரசாங்க செயல்முறை காலத்தைப் பொறுத்து மாறுபடும். ஆலோசனையின்போது உண்மையான கால அட்டவணையை தெளிவாக தெரிவிப்போம் — மாற்றங்கள் ஏற்பட்டால் உடனுக்குடன் அறியத் தருவோம்.
ஆம், உங்கள் தகவல்கள் முற்றிலும் இரகசியமாக பாதுகாக்கப்படும். உங்கள் விடயத்தை நிறைவேற்ற தேவையானவர்களுடன் மட்டுமே அவசியமான தகவல்கள் பகிரப்படும். கனேடிய தனியுரிமை சட்டத்திற்கு (PIPEDA) இணங்கி செயல்படுகிறோம்.

இன்றே தொடங்குங்கள் — உங்கள் இலங்கை பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்

இலவச ஆலோசனையை இப்போதே பதிவு செய்யுங்கள் — எங்கள் கனடா குழு தமிழிலும் ஆங்கிலத்திலும் உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறது.

📅 இலவச ஆலோசனைக்கு இங்கே பதிவு செய்யுங்கள்
📅 ஆலோசனை பெறுங்கள் WhatsApp இல் பேசலாம்